கேட்ராக்ட்டின்

கேட்ராக்ட்டின் (கண்புரை ) :

கண்புரை அறுவை சிகிச்சையை பற்றி பொதுவான தகவல் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.  பெரும்பாலான மக்கள் விரும்புவது, குணப்படுத்தக் கூடிய பார்வைக் கோளாறுகளில் முதலிடம் வகிப்பது (கேட்ராக்ட்) ஆகும்.  இந்த மைக்ரோ இன்சிஷன் செய்வதான்  மூலம் அவர்களுக்கு விரைவில் பார்வையை திரும்ப பெற முடியும். இந்த அறுவை சிகிச்சை செய்த  பிறகு, நோயாளிகளுக்கு ஒரு மணி நேரத்தில்  அவர்களுக்கு வீட்டில் திரும்ப முடியும்.

 

கண் புரை என்றாலென்ன?

முட்டை வடிவமான நம் கண் காமெராவை ஒத்தது. காமெராவைப் போன்று, லென்ஸ் , ஸ்க்ரீன் (retina), ஷட்டர் (iris), அபெர்ச்சர் (pupil) எல்லாம் உண்டு. கண்ணில் இயற்கையாய் அமைந்த லென்ஸ், ஸ்படிகம் போல் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. உடலின் மெடபாலிக் மாற்றங்களால், இத்தன்மையை சிறிது சிறிதாக இழந்து பனி படிந்தாற்போலவோ, பழுப்பு நிறமாகவோ மாறிக்கொண்டே இருப்பதையே புரை என்கிறோம்.

 

Cataract Surgery Chennai

 கண்புரை காரணங்கள் :

நீரிழிவு நோய்

நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகித்தல்

சில குழந்தைகள் பிறக்கும் போதே அவர்களின் லென்ஸ் பாதிக்கப்பட்டு அதனால் பார்வை குறைபாடுடன் பிறக்கலாம்.

பரம்பரை இயல் காரணத்தால்

 

கண்புரைஅறிகுறிகள் :

பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.

வர்ணங்களைப் பிரித்தறிவதில் சிரமம் மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.

சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவதும்.

தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது.

பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.

அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவது.

படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சிரமப்படுவது. இந்நிலை பொதுவாக இரவில் சற்று அதிகமாக இருக்கலாம்.

வெளிச்சத்தைச் சுற்றி வானவில் தெரிவது போல குறிப்பாக வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தைச் சுற்றி அவ்வாறு தெரியலாம். வர்ணங்கள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம்.

 

காப்சுலர் கேட்ராக்ட்டின் பிரித்தெடுத்தல் :

இந்த புதிய முறை நோயாளியின் கண்ணில் உள்ள இயற்கயான லென்ஸை அகற்றுவதற்கு, முன்பு போல 10 முதல் 12 மில்லி மீட்டர் வரை காயம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது. இந்தப் புதிய முறையில் நோயாளியின் கண்ணுக்குள் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள ஒரு ஊசி செலுத்தப்பட்டு ஊசியுடன் இணைந்த ஒரு புதிய உபகரணத்தின் (பேக்கோ எமல்சிஃபயர்) மூலமாக கண்ணுக்குள் இருக்கும் லென்ஸ் சிறுசிறு துகள்களாக சிதைக்கப்பட்டு உறிஞ்சி வெளியேற்றப்பட்ட. பின்னர் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள துளை வழியாக செலுத்தக்கூடிய, மடித்து உள்ளே வைக்கக்கூடிய செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டது.

இந்த முறையில் நோயாளி மருத்துவமணையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை தவிர்க்கப்பட்ட. மேலும் ஆபரேஷனின்போது தையல் போடுவதும் தவிர்க்கப்பட்டது. காயம் ஆறுவதற்கு அதிகபட்சம் ஒரு வார காலமே போதுமான. ஒரு வார காலத்திற்குள்ளாகவே நடைமுறை வாழ்ககைக்கு ஆபரேஷன் செய்து கொண்டவர் திரும்ப முடிகிறது.

 

மைக்ரோ இன்சிஷன் காட்டராக்ட் சிகிச்சை என்றால் என்ன :

கண் புரை நோயின் துவக்க நிலை என்றால் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் கண்ணாடி அணிந்தாலே போதுமானது.

நாள்பட்டது எனில் அறுவை சிகிச்சை செய்வதே நல்லது. இதனால் பாதிக்கப்பட்ட லென்ஸ் அகற்றப்பட்டு கண்பார்வையை மீட்டெடுக்கலாம்.

இப்போது பல நவீன கண் புரை அறுவை சிகிச்சை முறைகள் மருத்துவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் போகோயெமல்சிபிகேஷன் (Phacoemulsification or phaco) எனும் முறை மூலம், முழுமையாக கண் புரையை நீக்கி விடலாம்.

இந்த முறையில், தையல் போடுவதில்லை மேலும் வெறும் ஐந்து நிமிடங்களில் அறுவை சிகிச்சை நிறைவு பெறும். இதுபோன்று, தையல் இல்லாத முறைகளும் கையாளப்படுகின்றன. இதை, “மைக்ரோ இன்சிஷன் காட்டராக்ட் சிகிச்சை ‘(MICS) என அழைக்கின்றனர்.

உங்களுக்கு வலியில்லாமல் !…. குறைந்த விலையில் செய்து தரபடும். உடனே “அம்ரித் மருத்துவமனைக்கு  வாருங்கள்! … எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.